மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை 9 மணியளவில் முதலைகுடா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வருகை தருவதை அறிந்த பட்டதாரிகள் தங்களுக்கு நியமனங்களை வழங்க கோரி இந்த கவனயீர்ப்பு போர்ட்டத்தில் குதித்துள்ளனர்.

இருந்த போதிலும் குறித்த பாடசாலை நிகழ்வுக்கு ஆளுநர் சமூகமளிக்காத காரணத்தில் பட்டதாரிகள் ஏமாற்றத்துடன் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருகோணமலையில் கொட்டும் மலையிலும் தங்களது தொழிலுரிமை கோரிய போராட்டத்தை  நடத்தியிருந்த நிலையில் ஆளுநர் சந்திப்பதாக கூறி ஏமாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது