நீரிழிவு நோய் இன்று எல்லோரையும் மிரட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. சர்­வ­தேச கணக்­கை­விட, இங்கே மிக அதி­க­மாக நீரிழிவு நோயா­ளி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால்தான் ஒவ்­வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சர்­வ­தேச நீரிழிவு தினம் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. அப்­போது ஆண்டு முழு­வ­தற்­கு­மான திட்ட வாசகம் ஒன்றை வெளி­யிட்டு அதை நோக்கி விழிப்­பு­ணர்வு செயல்­பா­டு­களை அமைத்­துக்­கொள்­வார்கள். 

இது மிகவும் கவ­னிக்­கத்­த­குந்­தது. ஏன்­என்றால் பெண்கள் தங்கள் உடல்­நி­லையை பெரும்­பாலும் கருத்­தில்­கொள்­வ­தில்லை. குடும்­பத்­தினர் அனை­வ­ரையும் கவ­னித்­துக்­கொள்ளும் அவர்கள் தங்­களை கவ­னித்­துக்­கொள்ள மறந்­து­வி­டு­கி­றார்கள். அதனால் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நீரிழிவு நோயை தாம­த­மா­கத்தான் கண்­டு­பி­டிக்க முடி­கி­றது. அதனால் அம்மா, சகோ­தரி, மனைவி, பாட்டி, தோழிகள் போன்ற அனை­வரின் ஆரோக்­கி­யத்­திலும் ஆண்கள் அக்­கறை கொள்­ள­வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.பெண்கள் பொது­வாக உணவில் சரி­யான அக்­கறை செலுத்­து­வ­தில்லை. அவர்­க­ளுக்கு உணவை வீணாக்­கு­வது பிடிக்­காது என்­பதால் உணவை அதிகம் சாப்­பிட்­டு­வி­டு­கி­றார்கள். உடற்­ப­யிற்சி செய்­யவும் அவர்­க­ளுக்கு நேரம் கிடைப்­ப­தில்லை. அதனால் ஆண்­க­ளை­விட பெண்­க­ளுக்கு நீரிழிவு நோய் ஏற்­படும் வாய்ப்பு அதிகம். சர்க்­க­ரையின் அளவு திடீ­ரென்று குறைந்து பாதிப்­பிற்­குள்­ளாகும் அவஸ்­தையும் பெண்­க­ளுக்கு அதிகம். 

கர்ப்­ப­கா­லத்தில் நீரிழிவு நோயால் பாதிக்­கப்­படும் பெண்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. கர்ப்­ப­கா­லத்தில் நீரிழிவு நோய் ஏற்­ப­டு­கி­ற­வர்­களில் 50 சத­வீதம் பேருக்கு அடுத்த பத்து வரு­டங்­க­ளுக்குள் நிரந்­த­ர­மாக நீரிழிவு நோய் ஏற்­ப­டலாம். மீத­முள்­ள­வர்­க­ளுக்கு 20 வரு­டங்­க­ளுக்குள் ஏற்­ப­டலாம். அதனால் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­போது நீரிழிவு நோயால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் பின்பு உணவில் கட்­டுப்­பாட்டை கடைப்­பி­டிக்க வேண்டும். உடல் எடையை கட்­டுக்குள் வைத்­தி­ருக்­க­வேண்டும். உடற்­ப­யிற்­சியும் மேற்­கொள்­ள­வேண்டும்.

குறிப்பிட்டுச் சொல்லலாம்.