வவுனியா புட்சிட்டிக்கு முன்பாக நேற்று இரவு 11 மணியளவில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தங்கராசா தினேஷ்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.