'ரஜினிகாந்த் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கேற்ற பொருத்தமான நடிகர் கிடைப்பது மிகக் கடினம் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னம், பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 'எம்ஜிஆர், அம்பானி போன்ற பல பிரபலங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுத்துள்ளீர்கள்.

ஏன் ரஜினிகாந்த் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடாது?' என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பினர். அதற்கு இயக்குநர் மணிரத்னம், "ரஜினிகாந்த் வாழ்க்கையைப் படமாக எடுப்பது நல்ல யோசனைதான்.

ஆனால் ரஜினிகாந்தின் ஆளுமையை திரையில் கொண்டு வர, அதற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் கிடைத்தால்தான் என்னால் அதைச் செய்ய முடியும். அப்படி ஒரு நடிகர் கிடைப்பாரா? நான் ரஜினியுடன் ஒரே ஒரு முறை தான் வேலை பார்த்துள்ளேன். அது அற்புதமான அனுபவம். என்­றார்.