கடற்படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் : நடந்தது என்ன ?

Published By: Priyatharshan

05 Dec, 2017 | 10:03 AM
image

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று திங்கட்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் நேற்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுப்பாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்து தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதனை அறிந்து கொண்ட தாழ்வுப்பாட்டு கிராமமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாழ்வுப்பாட்டு கடற்கரை முகாமை நோக்கி சென்ற மக்கள் குறித்த மீனவர்களின் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந் து மன்னார் பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

எனினும் கடற்படையினர் கைதுசெய்த குறித்த  25மீனவர்களையும்  உடனடியாக விடுவிக்குமாறும் விடுவிக்காதபட்சத்தில் குறித்த தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமை விட்டு தாம் கலைந்து செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்ததை அடுத்து தாழ்வுப்பாட்டு கிராமத்தில்  பதற்றநிலை ஏற்பட்டது.

குறித்த மீனவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் கிராம மக்கள் கடற்படையினரிடம் கேட்ட போது அவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை தம் வசம் வைத்திருக்கவில்லை என கடற்படை தெரிவித்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார்   தாழ்வுப்பாட்டு கிராம மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் கடற்படையினரிடம் இருந்து பொலிஸார் பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

 மன்னார் மாவட்டத்தில்  ஏனைய பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட மீன் பிடித்தொழில்கள் இடம் பெறுகின்ற போதும் எமது  தாழ்வுப்பாட்டு பிரதேசத்தில் மாத்திரம் ஏன் கடற்படையினர் இவ்வாறான  கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50