அம்­பாந்­தோட்டை துறை­முகத்தை கைய­ளிப்­பது தொடர்பில் எதிர்­வரும் 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அவ­சர அமைச்­ச­ரவை கூட்­ட­மொன்று நடத்­து­வ­தென கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­நேரம் குறித்த விசேட அமைச்­ச­ரவை கூட்­டத்­தினை

 அடுத்து தேவை­யேற்­படின் விசேட பாரா­ளு­மன்ற விவா­த­மொன்றை மறுநாள் 8ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடத்­து­வ­தற்கும் குறித்த கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. 

பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் 11மணிக்கு நடை­பெற்ற கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­தின்­போதே மேற்­கண்ட தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கூட்டம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை கைய­ளிப்­பது தொடர்பில் மூலோ­பாய அபி­வி­ருத்தி சட்ட மூலத்தின் ஒழுங்கு விதி­க­ளுக்கு அமைய சம்­பந்­தப்­பட்ட கோரிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க வேண்­டி­யுள்­ளது. 

ஆகவே  எதிர்­வரும் 7 ஆம் திகதி அவ­சர அமைச்­ச­ரவை கூட்ட மொன்­றுக்கு அழைப்பு விடுத்து அமைச்­ச­ரவை அனு­ம­தி­யை­பெற்ற பின்னர் 7 ஆம் திக­தியே சம்­பந்­தப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.  

அத்­துடன் குறித்த விடயம் சம்பந்தமாக விவாதமொன்று அவசியமெனில் எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு 7:30 மணி முதல்; 9:30 மணி வரை அந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்பதாகும்.