பெண் சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல்; சந்தேகநபர்கள் நிபந்தனையுடன் பிணையில் விடுதலை

Published By: Robert

05 Feb, 2016 | 08:59 AM
image

மன்னார் பிர­தேச பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வரை பய­மு­றுத்­தி­ய­துடன் பாலியல் சம்­பந்­த­மாக அச்­சு­றுத்­திய மூன்று சந்­தே­க­ந­பர்கள் கடும் நிபந்­த­னை­க­ளுடன் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

மன்னார் பகு­தியைச் சேர்ந்த பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வரை அச்­சு­றுத்தி பாலியல் சம்­பந்­த­மாக அச்­சத்­துக்கு உள்­ளாகும் வகையில் வார்த்­தை­களை வெளி­யிட்­டது தொடர்­பாக மூன்று சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸில்   முறைப்பாடு செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து சந்­தே­க­ந­பர்கள் மூவ­ரையும் பொலிஸார் கைது­செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் இவர்கள் மூவரும் கடந்த திங்­கட்­கி­ழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­த னர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்னார் பொலி­ஸா­ரிடம் முறை­ப்பாடு செய்­யப்­பட்­டி­ருந்த  இவ் வழக்கு தொடர்­பாக 18.01.2016 ஆம் ஆண்டு சந்­தே­க­ந­பர்கள் மூவ­ருக்கு எதி­ராக நீதி­மன்றில் பொலிஸார் குற்­றப்­பத்­தி­ரத்தை தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

அதா­வது பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வரை பய­மு­றுத்­தி­ய­தா­கவும் அத்­துடன் பாலியல் சம்­பந்­த­மான  அச்­சு­றுத்­தலை வழங்­கி­ய­தா­க­வுமே இச் சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் குற்­றப்­பத்­தி­ரத்தை மன்றில் முன்­வைத்­துள்­ளனர்.

இது தொடர்­பான வழக்கு விசா­ரணை 18.01.2016 ஆம் திகதி இடம்­பெற்­ற­போது சந்­தே­க­ந­பர்கள் சார்­பாக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அம்­ம­னுவில் சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு பிணை வழங்­கும்­படி நீதி­ப­தி­யிடம் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார்.

 இந்த நிலையில் இவ் வழக்கு கடந்த முதலாம் திகதி திங்­கட்­கி­ழமை மீண்டும் மன்னார் நீதி­பதி ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டி­ருந்­த­போது ஏற்­க­னவே முன்­வைக்­கப்­பட்ட பிணை முன்­வைப்பை நீதி­பதி ஏற்­றுக்­கொண்டு நீதி­மன்றம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்­கி­யது.

அதா­வது மூன்று சந்­தேகநபர்­களும் தலா 25000 ரூபா ரொக்கப் பிணை­யிலும் அத்­துடன் ஒவ்­வொரு சந்­தேக நபர்­களும் இரு பிணை­யா­ளி­களை முன்­வைக்க வேண்டும் என்றும் சந்­தே­க­ந­பர்கள் முறைப்­பாட்­டா­ள­ரையோ அல்­லது சாட்­சி­யா­ளர்­க­ளையோ தொந்­த­ரவு செய்­யவோ அல்­லது பய­மு­றுத்­தவோ கூடாது எனவும் அத்­துடன் கட­வுச்­சீட்டு இருந்தால் அவை­களை மன்றில் சமர்­ப்பிக்க வேண்டும் என்றும் இவர்கள் நாட்­டை­விட்டு வெளி­யேறக் கூடாது என்­ப­தற்­காக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­பட வேண்டும் எனவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சந்தேகநபர்கள் மூவரும் கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இவ் மூவரையும் பிணையில் செல்ல அனுமதியளித்து எதிர்வரும் 16.05.2016 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத் தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02