தேங்காய் எண்­ணெ­யுடன் பாம் எண் ணெய் கலப்­படம் செய்து இர­க­சி­ய­மாக வியா­பாரம் செய்து வந்த நபர்  ஒருவர்  கைது செய்­யப்­பட்­டுள்ளார். பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தக­வலின் அடிப்­ப­டையில் தம்­புள்ளை  பொலிஸ் அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவ் மோசடி தொடர்­பான விப­ரங்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இதன்­போது 25000 லீற்றர் கலப்­படம் செய்­யப்­பட்ட தேங்காய் எண்ணெய் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. 

இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

குறித்த சந்­தேக நபர் வியா­பா­ரத்­துக்­காக பயன்­ப­டுத்­திய லொறி மற்றும் கெப் ரக வாகனம் பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.   கலப்­படம் செய்த எண்­ணெயை விற்­பனை செய்­த­தாக குற்­ற­வாளி பொலி­ஸா­ருக்கு ஒப்­புதல் வழங்­கி­யுள்ளார். அத்­துடன் வேறு சில இடங்­க­ளிலும் இவ்­வா­றான  வியா­பா­ரங்கள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் விசேட பொலிஸ் அதி­ரடிப் படை­யினர் குறிப்­பிட்­டுள்­ளனர். 

மேற்­கு­றிப்­பிட்ட மோச­டி­யுடன் தொடர்­பு­டைய சந்­தே­க­நபர் சட்­ட­வி­ரோ­த­மான புதையல் தோண்டும் செயற்­பா­ட்டிலும் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.  எண் ணெய் வியா­பா­ரம்­ பு­ரிந்து வந்த நிலை­யத்­துக்கு பின்னால் இப் புதையல் தோண்டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­­பட்­டுள்­ள­தாக அங்கு புதையல் வேலையில் ஈடு­பட்ட நப­ரொ­ருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. 

இந்த   மோசடி தொடர்­பான மேலதிக விசா­ர­ணை­களை தம்­புள்ளை விசேட பொலிஸார் அதி­ரடிப் படை­யினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.