தெற்கு அந்­த­மான் கடற்­ப­கு­தியில் ஏற்­ப­ட­வுள்ள வலு­வான குறைந்த காற்­ற­ழுத்தம் கார­ண­மாக வங்­காள விரி­கு­டாவில் தாழ­முக்கம் ஏற்­ப­ட­வுள்­ளது. இவ்­வே­ளையில் குறைந்த மற்றும் வலு­வான ஓர் காற்­ற­ழுத்தம் நாட்டின் அனைத்து கரை­யோர பகு­தி­க­ளையும் தாக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. எனவே எதிர்­வரும் எட்டாம் திகதி வரையில் கரை­யோர பிர­தே­சங்­களில் உள்­ளோரும் மீன­வர்கள் மற்றும் கடற் ­ப­ய­ணங்­களை மேற்­கொள்­வோரும் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட  வேண்டும் என அனர்த்த முகா­மைத்­துவ ‍அமைச்சின் மேல­திக செய­லாளர்  அம­ல­நாதன் தெரி­வித்தார்.

நாட்டில் எதிர்­வரும் நாட்­களில் ஏற்­படப்போகும் அசா­தா­ரண நிலை­மையை எதிர்­கொள்ள அவ­ச­ர­கால அவ­தான நட­வ­டிக்­கைகள் குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்­களை தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்­றது. இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 

தெற்கு அந்­தமான் கடல் பகு­தியில் உள்ள வலு­வான குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு பகுதி, காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­ல­மாக வலுப்­பெறும் வாய்ப்பு உள்­ளது. அடுத்த 24 மணி நேரத்­திற்கு ஒரு சில இடங்­களில் மழையும், ஓரிரு இடங்­களில் கன­ம­ழையும் பெய்ய வாய்ப்புள்­ளது. 

வலு­வான குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வுப் பகுதி இலங்­கையில் இருந்து 1300 கிலோ ­மீற்றர் தூரத்தில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்­டி­யுள்ள தெற்கு அந்­தமான் பகு­தி­யிலும் நீடித்­துள்­ளது. இதன் வேகம் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் 60 தொடக்கம் 70 கிலோ ­மீற்றர் அளவில் காணப்­படும். 

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­ல­மாக வலுப்­பெ­றக்­கூடும். டிசம்பர் 7ஆம், 8 ஆம் திகதி வரை­யி­லான கால ­கட்­டத்தில் இது வட­மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்­திரா, வட­த­மி­ழகக் கடற்­க­ரையை நோக்கி நக­ரக்­கூடும். 

இதனால் இலங்கை மற்றும் இந்­திய கரை­யோர பகு­தி­களில் அதி­க­ள­வான கடுங்­காற்று வீசப்­படும் தன்­மை­யுண்டு. 

மேலும் இன்று மற்றும் நாளைய தினங்­களில் காங்­கேசன் துறை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரையிலுள்ள கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.  

இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள பொதுமக்கள்  மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.