உள்­ளூ­ராட்சி சபை­களின் எல்லை நிர்­ணயம் மற்றும் அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து, வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னியை ரத்து செய்யக் கோரியே இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு, முன்னாள் அம்­ப­க­முவ பிர­தேச சபை உறுப்­பினர் விதா­ன­க­மகே நந்­த­ரா­ஜா­வினால் நேற்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா, அமைச்சின் செய­லாளர் பொது நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவம் அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார,  தேர்­தல்கள் ஆணைக் குழுவின் உறுப்­பி­னர்கள், சட்­டமா அதிபர் உள்­ளிட்ட 8 பேரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டே இந்த அடிப்­படை உறிமை மீறல் மனு தாக்கல்  செய்­யப்­பட்­டுள்­ளது.

 நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அம்­ப­க­முவ பிர­தேச செய­லாளர் பிரிவு தொடர்­பி­லான புதிய எல்லை நிர்­ணயம் கார­ண­மாக, பொது மக்­களும் பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தாரர், தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக உத்­த­ர­வி­டு­மாறும் உயர் நீதி­மன்றைக் கோரி­யுள்ளார்.

அத்­துடன் அம்­ப­க­முவ  மூன்­றாக  பிரிக்­கப்­பட்­ட­தா­கவும், அதில் சிவ­னொளி பாத­மலை அமைந்­துள்ள பகுதி உள்­ள­டங்கும் பிரிவில் சிங்­கள பெளத்தம் தொடர்பில் அடிப்­படை பிரச்­சினை நில­வு­வ­தா­கவும்   மனு­தாரர் அவ­ரது மனுவில் தெரி­வித்­துள்ளார். இதனால் இந்த எல்லை நிர்­ண­ய­மா­னது மத நல்­லி­ணக்­கத்­துக்கும் பாத­க­மாக அமைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனு­தாரர், கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அம்­ப­க­முவ எல்லை நிர்­ணயம் தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்­த­லையும் ரத்து செய்­யு­மாறு நீதி­மன்றைக் கோரி­யுள்ளார்.

முன்­ன­தாக அம்­ப­க­முவ பிர­தேச சபை அம்­ப­க­முவ, மஸ்­கெ­லிய, நோர்வூட் என  மூன்று பகு­தி­யா­கவும், நுவரெலிய பிரதேச சபை  நுவரெலிய, கொட்டகல, அகரபதனை என்று மூன்று பிரிவாகவும் அண்மையில் பிரிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானி ஊடாக பிரகடனப் படுத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.