SLIM Brand Excellence விருதை Huawei வென்றுள்ளது

Published By: Priyatharshan

04 Dec, 2017 | 04:48 PM
image

இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் முதலாவது இடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei, அண்மையில் கொழும்பு BMICH மண்டபத்தில் இடம்பெற்ற SLIM Brand Excellence விருதுகள் வழங்கும் விமரிசையான வைபவத்தில் வருடத்தின் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமப் பிரிவில் வெண்கல விருதை வென்றுள்ளது. 

“Exhibit Your Masterpiece” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த வர்த்தகநாமங்களுக்கு இனங்காணல் அங்கீகாரம் வழங்கப்பட்டு, அவற்றின் காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு நிகழ்வில் விருதை வென்றுள்ள ஒரேயொரு ஸ்மார்ட்போன் நிறுவனமாகவும் Huawei திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகநாமத்தின் பெறுபேற்றுத்திறன், உள்ளடக்கம், நடைமுறை மற்றும் நிதியியல் பெறுபேற்றுத்திறன் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

5 வருடங்கள் என்ற மிகவும் குறுகிய காலப்பகுதியில், உள்நாட்டு வாடிக்கையாளர்களின் அபிமானத்தை Huawei Consumer Business Group சம்பாதித்துள்ளதுடன், அதன் விளைவாக இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களின் மத்தியில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் வர்த்தகநாமமாக மாறியுள்ளது. 

மேலும், தனது பிரத்தியேகமான தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் Huawei பேணி வருகின்ற வலுவான பங்குடமையின் மூலமாக நாட்டில் முதற்தர ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற ஸ்தானத்தையும் அது சம்பாதித்துள்ளது.

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷுண்லி வாங் கூறுகையில்,

“ஒரு புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற நன்மதிப்பை Huawei கட்டியெழுப்பியுள்ள அதேசமயம், எமது உள்நாட்டுப் பங்காளர்களுடன் இணைந்து சந்தையில் பெறுமதியை விநியோகிப்பதிலும் கவனம் செலுத்தி வந்துள்ளது. 

இலங்கையில் மிகவும் விசாலமான வலையமைப்பினைக் கொண்டுள்ள எமது தேசிய விநியோகத்தரான சிங்கர், நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ஊடுருவதற்கு Huawei இற்கு உதவியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பூரிப்பான அனுபவத்தையும் வழங்கிவருகின்றது.” என்று குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“Huawei இன் அதிசிறந்த அணியுடன் இணைந்து, வியாபார வளர்ச்சியை முன்னெடுப்பது தொடர்பான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாகவும் எமது வர்த்தகநாமத்தின் அறுதியான தூதுவர்களான தொடர்ந்தும் வளர்ச்சிகண்டு வருகின்ற எமது வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றின் பெறுபேறாகவுமே இந்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

2017 முதற் காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் Huawei இன் சந்தைப்பங்கு 9.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென தொழிற்துறை ஆய்வு நிறுவனமான IDC அறிவித்துள்ளது. 

முக்கியமான நாடுகளில் நடுத்தர-வகுப்பு மற்றும் உயர் வகுப்பு ஸ்மார்ட்போன்களின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளமையே வளர்ச்சியின் உந்துசக்திக்கான மூல காரணமாக அமைந்துள்ளது. முன்னைய ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் விற்பனை வருமானம் 36.2 வீதத்தினால் அதிகரித்து 105.4 பில்லியன் சீன யுவான் தொகையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த செப்டெம்பரில் Apple வர்த்தகநாமத்தைப் பின்தள்ளிய Huawei உலகிலேயே இரண்டாவது ஸ்தானத்தில் திகழும் வர்த்தகநாமமாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகநாமத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு தனித்துவமான சாதனையாகும். முதல் 100 இடங்களிலுள்ள வர்த்தகநாமங்கள் தொடர்பில் Fortune 500 வெளியிட்டுள்ள சமீபத்தைய அறிக்கையில் 83 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ள Huawei, அண்மையில் Forbes சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலிலும் 88 ஆவது ஸ்தானத்தைப் பிடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் BrandZ வெளியிட்டுள்ள உலகில் முதல் 100 பெறுமதிமிக்க சர்வதேச வர்த்தகநாமங்களில் 49 ஆவது ஸ்தானத்தை HUAWEI எட்டிப்பிடித்துள்ள அதேசமயம், Brand Finance வெளியிட்டுள்ள சர்வதேசரீதியாக மிகவும் பெறுமதிவாய்ந்த 500 வர்த்தகநாமங்களின் தரப்படுத்தல் பட்டியலில் 40 ஆவது ஸ்தானத்தையும் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் Huawei 70 ஆவது ஸ்தானத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் Fortune 500 நிறுவனங்களின் தரப்படுத்தல் பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டிருந்தது.

GfK அறிக்கைகளின் பிரகாரம் இலங்கையில் 30மூ இற்கும் அதிகமான வலுவான சந்தைப் பங்கினைக் கொண்டுள்ள Huawei முதலாவது இடத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக மாறும் இலக்கினை நெருங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57