முன்னணி நடிகர்களாக இருந்தாலும், வளரும் நடிகர்களாகயிருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அனைத்து நாயகர்களும் விரும்புவது காக்கிச் சட்டை அணிந்து கம்பீரமாக பொலிஸ் கேரக்டரில் நடிப்பதைத்தான். ஒரு கொமர்ஷல் வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் விக்ரம் பிரபு காக்கி சட்டை அணிந்து நடிக்கும் கதையைத் தெரிவு செய்து நடித்து வருகிறார். அதற்கு துப்பாக்கி முனை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

அன்னக்கிளி என்ற படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான செல்வராஜின் வாரிசான தினேஷ் செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தாணு நிறுவனத்தின் ஆஸ்தான கமெராமேனான ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.

என்கவுண்டர் பொலிஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு தோன்றும் ‘துப்பாக்கி முனை ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தகவல் : சென்னை அலுவலகம்