பத்தரமுல்லை செத்சிறிபாய கட்டிடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மஹபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.