நவ­நா­க­ரி­கத்­துக்­காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்­க­ளுக்கு தண்­ட­னை­யாக அவர்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த வேண்டும் என  அழைப்­பு­வி­டுத்த எகிப்­திய சட்­டத்­த­ர­ணி­யொ­ருவ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் ­டுள்­ளது.

அத்­துடன் நபிஹ் அல் வாஹ்ஷ் என்ற மேற்­படி சட்­டத்­த­ர­ணிக்கு அவ­ரது  வன்­மு­றையைத் தூண்­டி­விடும் பொறுப்­பற்ற விமர்­ச­னத்­துக்­காக  சிறைத்­தண்­ட­னைக்கு மேலதி­க­மாக 20,000 எகிப்­திய பவுண் (1,130  அமெ­ரிக்க டொலர்) தண்டப் பணமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

விப­சா­ரத்­திற்கு எதி­ரான சட்ட வரைபு குறித்து  தொலைக்­காட்­சியில்  ஒளி­ப­ரப்­பப்பட்ட  விவாத    நிகழ்ச்­சியின்  போது நபிஹ் மேற்படி விமர்­ச­னத்தை  வெளி­யிட்­டி­ருந்தார்.

“யுவதி ஒருவர் தனது பின் பாகத்தின் அரைப் பகுதி வெளியே தெரிய  வீதியில் நடந்தால் நீங்கள் மகிழ்ச்­சி­ய­டை­வீர்­களா?" என அந்­நி­கழ்ச்­சியில் கேள்வி எழுப்­பிய நபிஹ், "அவ்­வாறு நடந்து செல்லும் யுவ­திகள் தொடர்பில் நான் கூறு­வது என்­ன­வென்றால், அத்­த­கைய யுவ­திகள் மீது பாலியல் ரீதி­யான தாக்­கு­தலை நடத்­து­வது தேசப்­பற்­றுள்­ளவர் ஒரு­வ­ரது கட­மை­யா­க­வுள்ள அதே­ச­மயம் அத்­த­கை­ய­வர்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வது தேசிய கட­மை­யாகும்" எனத்  தெரி­வித்­தி­ருந்தார்.

"நவ­நா­க­ரிகம் கருதி கிழிந்த ஆடை­களை அணியும் பெண்கள்  தம்மை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய் ­வ­தற்கு  ஆண்­க­ளு க்கு வர­வேற்­ப­ளிக்­கின்­றனர்" என அவர் மேலும் கூறினார்.  அவ­ரது மேற்­படி விமர்­ச­ன­மா­னது  பொது­ மக்கள் மத்­தி­யிலும் பெண்கள் உரி­மைகள்  செயற்­பாட்­டா­ளர்கள் மத்­தி­யிலும் கடும் சினத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

நபிஹின் விமர்­சனம்  பாலியல் வல்­லு­றவு மற்றும் வன்­மு­றையை தூண்­டு­வ­தா­க­வுள்­ள­துடன் எகிப்­திய அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள அனைத்து பிரி­வு­க­ளையும் மீறும் செயற்­பா­டா­கவும் உள்­ளது எனத் தெரி­வித்து  அந்­நாட்டு தேசிய பெண்கள் உரி­மைகள் சபை வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் அவ­ருக்கு 3  வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

நபிஹ் இதற்கு முன்னர்  பிறி­தொரு தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் நான் இஸ்­ரே­லியர் எவ­ரை­யா­வது பார்த்தால் அவரைக் கொல்வேன் எனத் தெரி­வித்து  பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்பிடத் தக்கது.

அத்துடன் அவர் கடந்த ஒக்டோபர் மாதம்  தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்  பெண்கள் முக்காடு அணியத் தேவையில்லை எனக் கருதுவதாக கருத்து வெளியிட்டிருந்த  மதகுரு ஒருவருடன்  கைகலப்பில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.