தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது

Published By: Robert

05 Feb, 2016 | 08:48 AM
image

வர­லாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 68 ஆவது சுதந்­திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்­கான இய­லுமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தமை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு விட­ய­மாகும். ஆனால் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடு­வதால் மாத்­திரம் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் தீர்ந்­து­விட்­ட­தாக கருத முடி­யாது. எனினும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­பு­களில் இதனை ஒரு ஆரம்­ப­மாக கொள்­ள­மு­டியும். இதனை யாரும் இன­வாத கண்­கொண்டு பார்க்க வேண்டாம். இதனை அர­சியல் பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

68 ஆவது தேசிய சுதந்­திர தின நிகழ்­வுகள் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை நுவ­ரெ­லி­யாவில், நுவ­ரெ­லியா மாவட்ட செய­லாளர் எலன் மீகஸ்­முல்ல தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­போது பாட­சாலை மாண­வர்­களின் அணி­வ­குப்பு மரி­யா­தையும் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன், சிறப்பு அதி­தி­யாக நுவ­ரெ­லியா மாந­கர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

தொடர்ந்து பேசிய இரா­ஜாங்க அமைச்சர்,

சுதந்­திர தினம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தின­மாக மாறி­யுள்­ளது. அதற்கு பல கார­ணங்­களை குறிப்­பி­டலாம். குறிப்­பாக நாட்டின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெவ்­வேறு கட்­சி­களின் தலை­வர்­க­ளாக இருந்த போதும் நல்­லாட்சி எனும் குடையின் கீழ் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. இன்று இவர்­களின் ஆட்­சியின் கீழ் எமது நாட்டை பல உலக நாடுகள் திரும்­பிப்­பார்க்க ஆரம்­பித்­துள்­ளன. இது நாம் குறு­கிய காலத்தில் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யாகும்.

இந்த வெற்­றிகள் தொடர வேண்­டு­மாக இருந்தால் நாம் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்டும். 1948 ஆம் ஆண்டு நாம் சுதந்­திரம் பெற்­றுக்­கொண்ட பொழுது தேசிய கீதம் இரண்டு மொழி­க­ளிலும் அதா­வது தமி­ழிலும் சிங்­கள மொழி­யில் பாடப்­பட்­டுள்ளது. ஆனால் அதன் பின்பு இன்று நல்­லாட்­சியில் அந்த நிலை மீண்டும் உரு­வா­கி­யுள்­ளது. எனவே, இவை பாரிய மாற்­றங்­க­ளாக இல்­லா­விட்­டாலும் ஆரம்பம் ஒரு சிறப்­பாக இருப்­ப­தாக நான் கரு­து­கின்றேன். இதனை யாரும் இன­வாத கண்­கொண்டு பார்க்க வேண்டாம். அர­சியல் பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு முயற்சி செய்ய வேண்டாம்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்­ப­தற்கு அர­சாங்கம் அங்­கீ­காரம் வழங்­கி­யதன் கார­ண­மாக இன்று கொழும்பில் நடை­பெற்ற தேசிய நிகழ்வை ஒரு சில இன­வாத அர­சி­யல்­வா­திகள் புறக்­க­ணித்­தி­ருப்­பது மீண்டும் இந்த நாட்டில் ஒற்­றுமை இன்மை ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சுதந்­திரம் என்­பது ஒரு தனிப்­பட்ட நப­ருக்கோ அல்­லது ஒரு குறித்த இனத்­திற்கோ அல்­லது ஒரு மதத்­திற்கோ உரித்­து­டை­யது அல்ல. மாறாக அது நாட்டின் அனைத்து இன, மத, மொழி­யி­ன­ருக்கும் பொது­வா­னது. சுதந்­தி­ரத்­திற்­காக அனைத்து தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டி­ருப்­பதை வர­லாறு எமக்கு தெளிவாக விளக்­கு­கின்­றது. ஒரு நாட்டின் ஒற்­றுமையை கல்­வியின் ஊடாக பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பது எனது அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08