ஜெய­ல­லி­தா­வுக்கு குழந்தை இருப்­ப­தாகக் கூறு­வதை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன் என்று நடிகை லதா கூறி­யுள்ளார்.

அனைத்­து­லக எம்­.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் நேற்று மது­ரையில் எம்.ஜி.ஆர். நூற்­றாண்டு விழா நடை­பெற்­றது. இதில் நடிகை லதா கலந்­து­கொண்டார்.

தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் லதா கூறு­கையில், ''ஜெய­ல­லி­தா­வுக்கு குழந்தை இருப்­ப­தாகக் கூறு­வதை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன். ஜெய­ல­லிதா உயி­ரோடு இருக்கும் போது சொல்­லாமல் இப்­போது மகள் இருப்­ப­தாகச் சொல்­வது உள்­நோக்கம் கொண்­டது. சொத்­துக்­காக பலர் புரளி பரப்­பு­கின்­றனர்.

ஒரு­வரின் தனிப்­பட்ட வாழ்க்கை எப்­படி வேண்­டு­மா­னாலும் இருக்­கலாம். அதை விமர்­சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடை­யாது. யாரும் விமர்­சிக்­கவும் முடி­யாது. ஜெய­ல­லி­தா­வுக்கு குழந்தை இருந்­ததா என்­பது எனக்குத் தெரி­யாது. அப்­படி இருந்­தி­ருந்தால் ஜெய­ல­லி­தாவே தன்­னுடன் வைத்­துக்­கொண்­டி­ருப்பார். எந்தத் தாயும் தனக்கு குழந்தை இல்லை என்று மறுக்கமாட்டார்.

லதா செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது நடிகை சச்சுவும், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் கீதா விஜயகுமாரும் உடனிருந்தனர்.