பிரான்ஸ் நாட்டின் கடற்­ப­டையின் போர்க்­கப்­ப­லான "ஓவேஞே " நேற்று கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. நான்கு  நாட்கள் விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள போர்க்­கப்பல் எதிர்­வரும் 6 ஆம் திகதி மீண்டும் இலங்­கையில் இருந்து பிரான்ஸ் நோக்கி பய­ணிக்­க­வுள்­ளது. 

இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடு­களின் பாது­காப்பு நட்­பு­றவை பலப்­ப­டுத்தும் நோக்­கத்தில் இலங்கை நோக்கி பய­ணித்த பிரான்ஸ் நாட்டின் போர்க்­கப்­ப­லான  "ஓவேஞே " நேற்று காலை  இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்தது. 

நான்கு நாட்கள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்த  "ஓவேஞே " போர்க்­கப்­பலை இலங்கை கடற்­ப­டை­யினர் தமது மர­பு­க­ளுக்கு அமைய வர­வேற்­ற­துடன் இரு தரப்பு உயர் அதி­கா­ரிகள் இடை­யிலும் சந்­திப்­பு­களும் இடம்­பெற்­றுள்­ளன.  142 மீற்றர் நீளமும், 20 மீற்றர் அக­லமும் கொண்ட இந்த போர்க்­கப்பல் 600 டொன் நிறை­கொண்­ட­தாகும். இதில் 145 கடற்­படை சிப்­பாய்கள் மற்றும் அதி­கா­ரிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ளனர்.  

மேலும் எதிர்­வரும் 6 ஆம் திகதி வரையில் இலங்­கையில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும்  "ஓவேஞே " போர்க்­கப்பல் அது­வ­ரை­யி­லான காலப்­ப­குதி வரையில் இலங்கை கடற்­ப­டை­யுடன் இணைந்து கூட்டு கடற்­படை பயிற்­சி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் பல்­வேறு விளை­யாட்டு மற்றும் கலை நிகழ்­ச்சி­க­ளிலும் பங்­கு­பற்­ற­வுள்­ளது இலங்கைக்கு வருவதற்கு முன்னர் குறித்த கப்பல் அவுஸ்தி ரேலிய துறைமுகத்தில் தரித்து நின்ற மையும் குறிப்பிடத்தக்கது.