உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி 500 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம் நேற்று முன்தினம் கேம்ப் நியூ மைதானத்தில் நடந்தது.

இந்த ஆட்டத்தில்  பார்சிலோனா 7-–0 என்ற கோல் கணக்கில் வாலென்சியா அணியை வீழ்த்தியது.

பார்சிலோனா அணியில் விளையாடிய மெஸ்ஸி மூன்று கோல்களை அடித்தார், இதில் ஒன்று மெஸ்ஸியின் 500ஆவது கோலாகும்.