அமெ­ரிக்­காவின் 51ஆவது மாநி­ல­மான இலங்­கையை பார்­வை­யி­டு­வ­தற்கு ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­தரப் பிர­தி­நிதி சமந்தா பவர் வரு­கிறார்.

Udaya Gammanpila

இவ­ரது வரு­கைக்கு எமது கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்றோம் என பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் எம்­.பி­.யு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார். இலங்­கையில் புலி ஆத­ர­வா­ளர்­களைச் சந்­திக்கும் சமந்தா பவர் ஏன் முஸ்லிம்,சிங்­களத் தலை­வர்­களை சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு மேற்­கொள்­ள­வில்­லை­யென்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய் கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே உதய கம்­மன்­பில எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஐ.நா.விற்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­தரப் பிர­தி­நி­தி­யான சமந்தா பவ­ருக்கு ஐ.நா.விலும் அமெ­ரிக்­கா­வி­லுமே கடை­மைகள் உள்­ளன. ஆனால் இதனைக் கைவிட்டு அவர் எதிர்­வரும் 23ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திக­தி­வரை இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.

இவ் விஜ­யத்தை அர­சாங்கம் இர­க­சி­ய­மாக வைத்­துள்­ளது. வெளியில் வெளி­யி­ட­வில்லை. இங்கு வரும் சமந்தா பவர் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன்இ வட மாகா­ண­சபை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ரையே சந்­திக்­கின்றார்.

இவர்கள் அனை­வரும் நாடு பிரி­வ­தற்கு ஆத­ர­வா­ன­வர்கள். சமந்­தாவும் விடு­தலை புலி ஆத­ர­வாளர். மனித உரி­மைகள் தொடர்­பாக கருத்­த­ரங்­கு­களை நடத்­து­பவர். இவ்­வா­றான ஒருவர் புலி­களின் அர­சியல் பிரி­வாக இயங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை மட்டும் சந்­திக்­கின்றார்.

வடக்­கி­லி­ருந்து 24 மணி நேரத்­திற்குள் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ரஸை சந்­திக்­க­வில்லை. அதே­போன்று பயங்­க­ர­வா­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிங்­க­ள­வர்கள் தொடர்பில் பேச சிங்­களத் தலை­வர்­களைச் சந்­திக்­க­வில்லை.

அத்­தோடு புலி­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்து பாதிக்­கப்­பட்ட தமிழ் தலை­வர்­க­ளையும் இவர் சந்­திக்­க­வில்லை. எனவே சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ர­ணைக்கு அழுத்தம் கொடுக்­கவே அவர் இங்கு வருகிறார்.

இலங்கை இன்று அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறியுள்ளது. அரசு நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்கியுள்ளது. எனவே தங்களது மாநிலத்தை பார்வையிடவே அவர் வருகிறார் என்றும் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.