சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.!

Published By: Robert

03 Dec, 2017 | 09:43 AM
image

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு  மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தெற்கு அந்­தமான் தீவு­களில் தற்­போ­தைக்கு தாழ­முக்கம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. அத்­தா­ழ­முக்கம் எதிர்­வரும் தினங்­களில் உக்­கி­ர­ம­டைந்து மத்­திய வங்­காள விரி­கு­டா­வி­னூ­டாக இந்­தியா நோக்கிப் பய­ணிக்­க­வுள்­ளது. அதற்­கி­ணங்க எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் அத்­தா­ழ­முக்கம் இலங்­கைக்கு கிழக்­காக பய­ணிக்­க­வுள்­ள­தா­கவும் கால நிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 

இதே­வேளை ஒக்கி (OCKHI) சூறா­வளி இலங்­கை­யி­லி­ருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் அரபுக் கடலில் நிலை கொண்­டுள்­ளது. அச்­சூ­றா­வ­ழியின் தாக்கம் குறை­வ­டைந்த போதிலும் மேல், ஊவா, சப்­ர­க­முவ ஆகிய மாகா­ணங்­களில் 50 தொடக்கம் 75 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை­வீழ்ச்சி பதி­வா­கலாம் என கால­நிலை அவ­தான நிலையம் எதிர்வு கூறி­யுள்­ளது. இதே­வேளை இரத்­தி­ன­புரி, களுத்­துறை மற்றும் காலி மாவட்­டங்­களில் மணிக்கு ஐம்­பது கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்­கூடும் எனவும் அந்­நி­லையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது.

 இதே­வேளை கடந்த சில தினங்­க­ளாக காலி, களுத்­துறை, மாத்­தறை,மொன­ரா­கல, அம்­பாந்­தோட்டை, கண்டி, நுவ­ரெ­லிய, இரத்­தி­ன­புரி, பதுளை,கம்­பஹா,புத்­தளம், கேகாலை,மாத்­தளை, குரு­நாகல், கொழும்பு, அநு­ரா­த­புரம் ஆகிய மாவட்­டங்­களில்  நிலவி வரும் சீரற்ற கால­நி­லை­யினால் 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.மேலும் அறு­பத்­தொரு பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்­துடன் முப்­பத்­தோ­ரா­யி­ரத்து நூற்று அறு­பத்­தைந்து குடும்­பங்­களைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து ஆறா­யி­ரத்து எழு­பத்­தாறு பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 குறித்த அனர்த்­தத்­தினால் அறு­நூற்று தொன்­னூற்று நான்கு வீடுகள் முழு அளவில் சேத­மைந்­துள்­ள­துடன் 25 ஆயி­ரத்து நூற்றுப் பதி­னேழு வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­மை­டந்­துள்­ளன.  எனவே பாதிக்­கப்­பட்ட ஆயி­ரத்து நானூற்று 21 குடும்­பங்­களைச் சேர்ந்த ஐயா­யி­ரத்து நானூற்று முப்­பத்­தைந்து பேர் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 காலி மாவட்­டத்தில் எட்­டுப்பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஐந்து பேர் காய­ம­டைந்­துள்­ளனர். மேலும் ஏழா­யி­ரத்து 44 குடும்­பங்­களைச்  சேர்ந்த 26 ஆயி­ரத்து 254 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். களுத்­துறை மாவட்­டத்தில் 23 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 14 ஆயி­ரத்து 29 குடும்­பங்­களைச் சேர்ச்த 55 ஆயி­ரத்து 545 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

 மாத்­தறை மாவட்­டத்தில்  ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 5 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். மேலும் ஆயி­ரத்து 210 குடும்­பங்­களைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 743 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மொன­ரா­கலை மாவட்­டத்தில் 72 குடும்­பங்­களைச் சேர்ந்த 281 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் 258 குடும்­பங்­களைச் சேர்ந்த 945 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மாவட்­டத்தில் 16 குடும்­பங்­களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இருவர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 511 குடும்­பங்­களைச் சேர்ந்த 2 ஆயி­ரத்து 228 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் இருவர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 380 குடும்­பங்­களைச் சேர்ந்த ஆயி­ரத்து 152 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பதுளை மாவட்­டத்தில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன்  4 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.  மேலும் ஆயி­ரத்து 320 குடும்­பங்­களைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 964 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 கம்­பஹா மாவட்­டத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஆறு பேர் காய­ம­டைந்­துள்­ளனர். மேலும் ஆயி­ரத்து 261 குடும்­பங்­களைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 961 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். புத்­தளம் மாவட்­டத்தில் 8 குடும்­பங்­களைச் சேர்ந்த 27 பேரும், கேகாலை மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 565 பேரும், குருநாகல் மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த  8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 ஆயிரத்து 316 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02