உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­திய வெளி­வி­வகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கி­ழமை இலங்கை வரு­கின்றார். இந்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­னரை இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திக்க­வுள்ளார்.

அத்­துடன் இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள இலங்கை -– இந்­திய நாடு­க­ளுக்கு இடை­யி­லான கூட்டு ஆணைக்­கு­ழு­விலும் சுஷ்மா சுவராஜ் கலந்­து­கொள்­ள­வுள்ளார். இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜின் நிகழ்ச்சி நிரலில் 6 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜயம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் இறுதி நேரத்தில் அந்த விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள் ­ளது.

பொரு­ளா­தாரம், வர்த்­தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உற­வு­களை வலுப்­ப­டுத்தும் நோக்கில் இலங்கை - – இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் 8 ஆவது அமர்வு கொழும்பில் இன்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ள­துடன் உடன்­ப­டிக்­கை­களும் கைச்­சாத்­தி­டப்­படவுள்­ளன. இதன்­போது இரண்டு நாடு­க­ளுக்குமிடை­யி­லான பொரு­ளா­தாரம், சுற்­று­லாத்­துறை, சக்தி வளத்­துறை, தொழில்­நுட்பம் , கடல்­மார்க்க, பாது­காப்பு, கூட்­டு­றவு, சமூக, கலா­சாரம், பாது­காப்பு ஒத்­து­ழைப்பு, மக்கள் தொடர்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளன.

இதற்­கான ஆயத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக கடந்த 12 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை இந்­திய வெளி­யு­றவு செயலர் ஜெய்­சங்கர் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்­த­துடன், அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜின் இந்த விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து இலங்கை - இந்­திய கூட்டு ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் மற்றும் மீனவர் பிரச்­சினை தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரையும் சந்­திக்­க­வுள்ளார்.

இந்த சந்­திப்­பு­களின் பின்னர் யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வி­ருந்த அவர் அங்கு வட­மா­காண முத­ல­மைச்­சரை சந்­திப்­ப­தற்­கும, இந்­திய நிதி­யு­த­வியின் கீழ் வடக்கில் முன்­னெ­டுக்­கப்­படும் வீட்டு திட்­டங்கள் உள்­ளிட்ட இந்­திய அபி­வி­ருத்தித் திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிடவும் திட்டமிட்­டிருந்தார்.

ஆனால் இறுதி நேரத்தில் அவ­ரின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.