ஒக்கி எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளியானது தற்போது இலங்கைக்கு மேற்கே அராபிய கடலில் 850 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த ஒக்கி எனப்படும் சூறாவளியால் இலங்கைக்காக ஆபத்து தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் புத்தளம், காலி, மாத்தறை ஆகிய பகுதிகளில் கூடியளவில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் 50 முதல் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இரத்தினபுரி, களுத்துறை மற்றுமு் காலி ஆகிய மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒக்கி எப்படும் சூறாவளியானது இலட்சதீவிற்கு மேலாக மணித்தியாலத்திற்கு 14 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

இது அடுத்த 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து, தொடர்ச்சியாக மேற்கு - வடமேற்குத் திசையில் இலட்சத்தீவினூடாக நகர்ந்து, அடுத்த 48 மணித்தியாலத்தில் வடகிழக்காக நகரும் திசையை மாற்றிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.