( ஆ.பிரபுராவ் )

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இந்தியாவின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களும் இலங்கையின் பருத்தித்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

மீனர்களிடம் இருந்து 2 படகுகளை கைப்பற்றியுள்ள கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கவுள்ளனர்.