தொலைக்­காட்சி நாடக தொடரை  பார்த்து, அதில் வரும் கதா­பாத்­தி­ரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயி­ரி­ழந்த சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கர்­நா­டக மாநிலம் தாவ­ண­கெரே மாவட்டம் ஹரி­ஹரா டவுனைச் சேர்ந்­தவர் மஞ்­சுநாத். (கூலித் தொழி­லா­ளி)­ சைத்ரா ஆகியோரின் மகள் பிரார்த்­தனா (வயது 7) 2- ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்­துள்ளாள். வீட்டில் தொலைக்­காட்­சியில்  ஒரு குறிப்­பிட்ட கன்­னட நாட­கத்தை பார்ப்­ப­தனை வழக்­க­மாக கொண்­டி­ருந்­துள்­ளனர்.

இந்த நாட­கத்தில் நடிகை ஒருவர் தன் கை, கால்­களில் தீ வைத்து, தீப்­பந்தம் ஏந்தி நட­ன­மாடும் காட்­சிகள் வந்துள்ளன. அதைப் பார்த்த பிரார்த்­தனா, தானும் கையில் ஒரு பேப்­பரை எடுத்து தீ வைத்­துக்­கொண்டு நட­ன­மா­டி­யுள்ளாள். 

அப்­போது பிரார்த்­த­னாவின் ஆடை யில் தீப்­பற்­றி­யுள்­ளது. வலி தாங்க முடி­யாமல் சிறுமி அல­றிய சத்தம் கேட்டு அக்கம் பக்­கத்­தினர் ஓடி­வந்து, சிறு­மியின் உடலில் பற்­றி­யி­ருந்த தீயை அணைத்து அரச மருத்­து­வ­ம­னைக்கு சிறு­மியைக் கொண்டு சென்­றுள்­ளனர்.

கடந்த 15 நாட்­க­ளுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டு­வந்த நிலையில், பிரார்த்­தனா சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தினம் இறந்தாள். இதை­ய­டுத்து, சிறு­மியின் தந்தை மஞ்­சுநாத் அளித்த புகா­ரின்­பேரில் ஹரி­ஹரா டவுன் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

பிரார்த்­த­னாவின் தந்தை மஞ்­சுநாத் இது தொடர்பில்  கூறு­கையில், ‘‘குழந்­தை­களை தொலைக்காட்சி நாடகம் பார்ப்­பதை தடுக்க வேண்டும். நான் என் மகளை கண்­கா­ணிக்கத் தவ­றி­விட்டேன். என் மகள் உடலில் தீ வைத்து நட­ன­மாடி உயி­ரி­ழந்­தி­ருக்­கிறாள். இத்­த­கைய சம்­ப­வங்கள் இனியும் தொட­ராத வகையில் அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.