( ஆ.பிரபுராவ் )

சவுதியில் மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர் நடுக்கடலில் மாயமானர்  இதனால்  ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக்கிராமங்களில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக தாக்குதல் மற்றும் சிறைப்பிடிப்பு சம்பவங்களால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர் .

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டு தற்போது மீன்பிடி தொழிலே செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் இம் மாவட்ட மீன்பிடி தொழிலாளாகள் கேரளா, கன்னியாகுமரி, மங்களூர் , அந்தமான் மற்றும் சவுதி போன்ற இடங்களுக்கு பிழைப்புத் தேடி செல்வது அதிகரித்துள்ள நிலையில் பாம்பன் பிரான்சிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த   இக்னேசியஸ், அந்தோணி, அடிமை, சைலஸ் ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்  ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர் .

இன்று காலை சவுதியிலுள்ள  சுபைல் என்ற பகுதியில் பாம்பனைச் சேர்ந்த நான்கு பேரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ் வழியாக வந்த  அந்நாட்டு எண்ணெய்கபப்ல் இவர்களின் படகில்  வேகமாக மோதியுள்ளது.  இதனால்  படகிலிருந்த ஐந்து பேரும் நடுக்கடலில் விழுந்துள்னர். அச்சம்பவம் அறிந்து அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சகமீனவர்கள நான்கு பேரை சுமார் மூன்று மணி நேரமாக தேடி  பத்திரமாக மீட்டனர் .

ஆனால் இக்னேசியஸ் என்ற மீனவர் கடலில் மாயமானர் மாயமான மீனவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

சவுதியில் பாம்பன் பகுதி மீனவர் மாயமான செய்தியால் ராமநாதபுரம் மாவட்ட கடலோப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் உறவினர்களும் இந்திய அரசு தலையிட்டு இச்சம்பவத்திற்கு காரணமான சவுதிக்கப்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாயமானமீனவரை பத்திராமாக மிட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனர்.