இலங்­கையில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் 1.6 மில்­லியன் பேர் காணப்­ப­டு­வ­தா­கவும், இது இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் 7.9 வீதம் எனவும்  மத்­திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அந்த அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அவர்­க­ளுக்கு ஏற்ற வாழ்­வா­தா­ரங்­களை வழங்கி  பொரு­ளா­தார ரீதி­யாக  பாது­காக்க வேண்டும்.  சமூ­கத்தில் மதிப்பு பெற்று அவர்­களும் நாட்டை அபி­வி­ருத்தி செய்யும் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் .  

புள்ளி விபர திணைக்­க­ளத்தின் அறிக்­கையின் படி ஒவ்­வொரு 1000 ஆண்­களில் 77 ஆண்­களும் ஒவ்­வொரு 1000 பெண்­களில் 96 பெண்­களும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.   இலங்­கையில் உள்ள மொத்த மாற்­றுத்­

தி­ற­னா­ளி­களில்  996, 936 பேர் பார்வை குறை­பாட்­டு­டனும் 734, 213 பேர் கால்கள் ஊன­

மா­கவும் 389, 077 பேர் செவி ஊன­மா­கவும் 343, 689 பேர் உள­வள பிரச்­சி­னைகள் உள்­ள­வர்­க­ளா­கவும்  197575 சுய பாது­காப்பு இல்­லா­தவர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இலங்கையில் காணப்படும் 1.6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளில் 43 வீதம் ஆண்களாகவும் 57 வீதம் பெண்களாகவும் காணப்படுகின்றனர்.