ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்று பிரித்­தா­னியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இந்த விவ­கா­ரத்தை தாம் எழுப்­பி­ய­தாக, ஆசிய -பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னி­யாவின் இரா­ஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரி­வித்­துள்ளார்.

“ஒக்டோபர் மாத தொடக்­கத்தில் யாழ்ப்­பாணம் மற்றும் கொழும்­புக்கு, மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­விடம் எடுத்துக் கூறி­யி­ருந்தேன்.

இரா­ணு­வத்­தினர் வச­முள்ள அனைத்து தனியார் காணி­க­ளையும் விடு­வித்தல், காணாமல் போனோர் பணி­ய­கத்தை செயற்­ப­டுத்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல் உள்­ளிட்ட விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அந்த வாக்­கு­று­திகள் அமைந்­துள்­ளன.

34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும், இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கும் பிரித்தானியா தொடர்ந்து உதவும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.