பிரித்­தா­னிய பிர­தமர் தெரேஸா மே என்னில் கவனம் செலுத்­து­வதை விடுத்து தனது நாட்­டி­லான தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

 பிரித்­தா­னிய தீவிர வலது சாரிக் குழுவால் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட  பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய 3 காணொளிக் காட்­சி­களை டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தின் மூலம் மீளப் பரி­மாறிக் கொண்­ட­தை­ய­டுத்து,  இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யொ­ருவர் செயற்­பட்­டுள்­ளமை தவ­றா­னது என தெரேஸா மேயின் பேச்­சாளர் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.

 பிரித்தானிய தீவிர வலதுசாரி பிரிட் டிஷ் தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிறிட்டன் பெர்ஸட் அமைப்பின் பிரதித் தலைவர் ஜேடா பிரான்ஸனால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளையே ட்ரம்ப் மீள வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் தன்னால் வெளியிடப்பட்ட புதிய செய்தியில்,  தெரேஸா மே தன்னைக் கவனிப்பதை விடுத்து தீவிரவாதிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.