19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்­க­ளா­தேஷில் நடை­பெற்று வருகி­றது. நேற்று முன்­தினம் நடை­பெற்ற கடைசி லீக் போட்­டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்­டி­யின்­போது ஒரு வேடிக்கை நடந்தது. இலங்கை அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான கமிந்து மெண்டிஸ் இரண்டு,கைக­ளாலும் பந்து வீசும் திறமை படைத்­தவர். இந்த போட்­டி­யின்­போது வலது கை துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு இடது கை மூல­மா­கவும், இடது கை துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு வலது கையாலும் பந்து வீசி அசத்­தினார்.

இவ­ரது பந்து வீச்சை பார்த்து அனை­வரும் ஆச்­சரியம் அடைந்­தனர்.

கமிந்­து­வுக்கு 17 வய­தா­கி­றது. வலது கை பந்­து­வீச்சு மற்றும் இடது கை ஆர்த்­தோடாக்ஸ் பந்து வீச்சு மூலம் அனை­வ­ரையும் அசத்­தினார். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் இந்த இரு வகை பந்து வீச்­சையும் அவர் மாறி மாறி நிகழ்த்­தி­யதால் பாகிஸ்தான் வீரர்­களே குழம்பிப் போய் விட்­டனர்.

இப்­படி பந்து வீசு­வது, அதுவும் இவ்­வ­ளவு இளம் வயதில் வீசு­வது அரி­திலும் அரிது. இது ­வரை சர்­வ­தேச போட்­டி­களில் இப்­ப­டிப்­பட்ட பந்து வீச்சை யாரும் கொடுத்­த­தில்லை என்பதால் கமிந்து வரலாற்றில் இடம் பெற்று விட்டார்.