“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் ! இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு !

Published By: Priyatharshan

01 Dec, 2017 | 11:24 AM
image

இலங்கையின் கொழும்புக்கு மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த “ஒகி” என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்று சென்றுள்ளதாகவும்  இதனால் அது இலங்கையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அழடமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. 

குறிப்பாக வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் வேளையில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடற் பகுதியில் மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 இற்கு இடைப்பட்ட கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

ஏனைய கடற் பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதுடன், மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் காற்று வீசுமெனவும் கடற் பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதனால் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடல் பயணங்கள், நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38