கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு, கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் சம்பவதினமான நேற்று இரவு உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.