கல்கமுவ பிரதேசத்தில் " கல்கமுவே தல புட்டுவா" என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை அம்பன்பொல பொலிஸார் கைதுசெய்துள்னர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாகவும் அனைவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.