அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடுத்தக்கூடிய குறித்த படகு சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

கடற்படையினர் தம்மை நோக்கி வருவதைக் கண்ட சிலர் படகில் இருந்து தப்பிச் சென்றனர். படகில் எஞ்சியிருந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.

படகின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.