தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மீது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த ஆறு வருட காலங்களில், சுமார் எழுபத்தைந்து மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததன் பேரிலேயே அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.