இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக உருமாறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இலங்கைக்கு சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் இத்தாழமுக்கம் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகள் ஊடாகக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், நாட்டின் அனேக பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை அனுசரித்து பொதுமக்கள் தத்தமது பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.