சபரிமலையில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின்போது, தேவஸ்தானத்தின் உணவு விடுதி உள்ளிட்ட பல இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் மிகப் பாரிய அளவில் மீறப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோன்றியுள்ளது.

குறிப்பாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள், போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி அடுப்புகளுக்கு அருகாமையிலேயே வைக்கப்பட்டிருந்தமை குறித்து அதிகாரிகள் உரிய நபர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

உரிய இடங்களில் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்படாமல் இருந்ததையும் சில தீயணைப்புக் கருவிகள் மீள் நிரப்பப்படாமலும் புதுப்பிக்கப்படாமலும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வையடுத்து உடனடியாக, விதிமுறைகளை மீறியுள்ள உணவகங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்தும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.