தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் மீகஸ்வெவ பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

காரொன்று பஸ்ஸொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.