புலம்பெயர்ந்தோரின் ஒத்துழைப்பு தேவை

19 Nov, 2015 | 10:58 AM
image

இன­வாதம், மத­வாதம் உள்­ளிட்ட நாட்டில் காணப்­பட்ட பல தரப்­பட்ட பிரச்­சி­னை­களின் கார­ண­மாக நாட்டை விட்டு புலம்­பெ­யர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். மேலும் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் அனை­வரும் இலங்­கையின் புதிய மாற்றம் நோக்­கிய பய­ணித்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார்.

Ranil Wickremesinghe

ஜன­வரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­று­வது உள்­ளிட்ட அனைத்து நல்­லாட்சி வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் 2000 பேருக்கு இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும உரை­யாற்­று­கையில்,

ஜன­வரி எட்டாம் ஆம் திகதி நாட்டில் ஆட்சி மாற்றம் செய்­யப்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி கதி­ரையில் அமர வைப்­ப­தற்கு முழு நாட்டு மக்­களும் ஆணை வழங்­கினர். இந்­நி­லையில் தற்­போது நாட்டில் நல்­லாட்­சி­மிக்க அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நல்­லாட்சி வேலைத்­திட்­டங்கள் மிகவும் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­க­மைய முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­று­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். எமது புதிய அர­சாங்­கத்தின் அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளது.

இதற்­க­மைய புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்கும் வேலைத்­திட்­டத்­தினை புதிய அர­சாங்கம் மும்­மு­ர­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதன்­பி­ர­காரம் தேசிய அர­சாங்­கத்­தினால் முதற்­த­ட­வை­யாக இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. தகவல் தொழில்­நுட்பம் வளர்ச்­சிக்கு ஏற்ற வகையில் எமது புதிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம் அமையும்.

விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ராக நாட்டில் நிலைக்­கொண்­டி­ருந்த யுத்தம் கார­ண­மாக தமிழ் மக்கள் பலர் இலங்­கையை விட்டு புலம்­பெ­யர்ந்­தனர். நாட்­டிற்கு பெரும் வர­மாக கிடைக்­க­பெற்ற புத்­தி­ஜீ­விகள் பலர் எமது நாட்டை விட்டு பிரிந்து சென்­றனர். அதே­போன்று இலங்­கையில் இருந்தால் எமது பிள்­ளை­க­ளுக்கு சீரான கல்வி கிடைக்­காது என்ற அச்­சத்தில் பல சிங்­க­ள­வர்கள் நாட்டை விட்டு சென்­றனர். இன­வாதம் தலை­வி­ரித்­தா­டி­யதன் விளை­வாக முஸ்­லிம்­களும் எம்மை விட்டு சென்­றனர்.

இந்­நி­லையில் தற்­போது இன­வாதம் , மத­வாதம் முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் நாட்டில் மிகவும் சாத­க­மான சூழல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இன­வாதம் இல்­லாத புதி­ய­தொரு இலங்கை கட்­டி­யெ­ழுப்­ப­பட்­டுள்­ளது ஆகவே அச்சம் கார­ண­மாக நாட்டை விட்டு புலம்­பெ­யர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் அனை­வரும் நாட்­டிற்கு மீளவும் திரும்ப வேண்டும்.

புதிய அர­சாங்­கத்­தினால் பல்­வேறு நல்­லாட்சி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இத்­த­கைய செயற்த்­திட்­டங்­க­ளுக்கு புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்டும். இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்கும் வேலைத்­திட்டம் எமது ஆட்­சியின் போதே மிகவும் சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

புலம்­பெ­யர்ந்­த­வர்­களில் இரட்டை பிர­ஜா­வு­ரிமை கிடைக்க பெறா­த­வர்கள் அந்த நாட்டில் இருந்து கொண்டே இலங்­கையின் மாற்றம் நோக்­கிய பய­ணத்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும். அதே­போன்று நல்­லாட்­சியை மேம்­ப­டுத்தும் எமது அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவு வழங்குவது அவசியமாகும்.

இங்கிலாந்திலோ அல்லது ஏனைய நாடுகளிலோ கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தால் அங்கே விளையாடும் இலங்கை அணிக்கு எமது தாய்நாடு என்ற தேசப்பற்று சிந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றீர்கள். ஆகவே இது போன்று நாட்டின் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08