நகர்த்தல் பத்­தி­ரத்தின் மீது இன்று விசா­ரணை இல்லை.!

Published By: Robert

30 Nov, 2017 | 10:20 AM
image

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை,  அதன் உறுப்­பி­னர்­களின்  எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து,கடந்த 2017 பெப்­ர­வரி மாதம் 17ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதித்த வழக்கை இன்று 30 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்கக் கோரி சட்ட மா அதி­பரால்  தாக்கல் செய்­யப்­பட்ட நகர்த்தல் பத்­திரம் (மொடிஒன்)  இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என அறி­விக்­கப்­பட்டுள்­ளது. 

இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் வழக்­குகள் பட்­டி­யலில் குறித்த நகர்த்தல் பத்­திரம் தொடர்பில் எவ்­வித பதிவும் இல்­லாத நிலையில்,  அது தொடர்பில் வின­விய போது, குறித்த நகர்த்தல் பத்­திரம் இன்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­ப­ட­மாட்­டது எனவும், ஏற்­க­னவே வழக்கு விசா­ர­ணைக்கு குறிக்­கப்­பட்ட  டிசம்பர் 4 ஆம் திகதி அது விசா­ர­ணைக்கு எடுக்­கப்­படும்  எனவும் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் பதி­வாளர் தெரி­வித்­துள்ளார்.

 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 93 இற்­கான தேர்­தல்­களை நடாத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும்,  கடந்த 22 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய 2006/44 எனும் அதி­வி­சேட வர்த்­த­மானி  அறி­வித்­த­லுக்­கான இடைக்­கால தடை கார­ண­மாக அத்­தேர்­தல்­களை நடாத்த முடி­யாது உள்­ள­தா­கவும்  சுட்­டிக்­காட்டி சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய கடந்த திங்­க­ளன்று நகர்த்தல் பத்­திரம் ஒன்­றினை தாக்கல் செய்தார். அத்­துடன்  அவ்­வாறு தேர்­தலை நடாத்த முடி­யாது போவதால் அது பொது மக்­களின் வாக்­கு­ரி­மைக்கு விடுக்­கப்­படும் பாரிய அச்­சு­றுத்தல் எனவும் சட்ட மா அதிபர் தனது நகர்த்தல் பத்­திரம் ஊடாக சுட்­டிக்­காட்­டியே, இடைக்­கால தடை விதிக்­கப்­பட்ட  குறித்த வழக்கை இன்று 30 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்­கு­மாற கோரிக்கை  முன்­வைத்­தி­ருந்தார்.

 இந் நிலை­யி­லேயே இந்த நகர்த்தல் பத்­தி­ரத்தின் பிர­காரம் குறித்த வழக்கு இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டது எனவும், ஏற்­க­னவே நீதி­ப­திகள் நிர்­ண­யித்த டிசம்பர் 4 ஆம் திகதி இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வரும் எனவும் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

முன்­ன­தாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை , அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து, உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் கடந்த 2017 பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதித்து மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. குறித்த  வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்­யு­மாறு கோரி வாக்­கா­ளர்கள் அறு­வ­ரினால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல்ச் செய்­யப்­பட்­ட­டுள்ள ரீட் இலக்கம் 373/2017 எனும் மனுவை  கடந்த நவம்பர் 22 ஆம் திக­தி­யன்று   விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டே மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான எல்.டி.பீ. தெஹி­தெ­னிய, குமு­தினி விக்­ர­ம­சிங்க மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் இந்த இடைக்­கால தடை உத்­தர்வைப் பிறப்­பித்­தது.

அதன்­படி  இந்த இடைக்­கால தடை உத்­த­ர­வா­னது எதிர்­வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை இருக்கும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்த  நீதி­மன்றம் அது­வரை அந்த வர்த்­த­மா­னியை மைய­பப்­டுத்தி எந்த நட­வ­டிக்­கை­களும் செய்ய முடி­யாது எனவும், அன்­றைய தினம் இந்த வழக்கின் பிர­தி­வா­தி­க­ளான உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் குறித்த அமைச்சின் செய­லாளர் எச்.டி.கமல் பத்­ம­சிறி ஆகியோர் மன்றில் நேர­டி­யாக ஆஜ­ரா­கவும் அறி­வித்தல் விடுத்­தி­ருந்­தது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை, உறுப்­பி­னர்­களின்  நிர்­ணயம் தொடர்பில் அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட, வர்த்­த­மானி அறி­வித்­தலை செல்­லு­ப­டி­யற்­ற­தாக, அறி­விக்கக் கோரி, சட்­டத்­த­ரணி மலிக சுசந்தி அல்­ல­பிட்­டவின் ஆலோ­ச­னைக்கு அமைய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி  சஹீட்­டினால் கடந்த 15 ஆம் திகதி  ரீட் மனு­வொன்று வாக்­கா­ளர்கள் அறுவர் சார்பில் தாக்கல்ச் செய்­யப்­பட்­டது. வில்­லியம் கொபல்­லாவ மாவத்த, கண்­டியைச் சேர்ந்த வரு­ச­மன டேவகே கெதர விஜே­ரத்ன அல்­லது  வடு­கெ­தர விஜே­ரத்ன,  கொழும்பு - கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த தொட்­டகே சிறி­சேன பெர்­ணான்டோ,  ஹல்­மில்­லா­வெ­வவைச் சேர்ந்த ராஜ­பக்ஷ கீர்த்தி மஹிந்த  கரு­ணா­தி­லக குமார, பண்­டா­ர­வ­ளையைச் சேர்ந்த டிலந்த கனிஷ்க ஆரி­ய­ரத்ன, உட­வ­ல­வையைச் சேர்ந்த ஜனக குமார ராஜ­பக்ஷ சேனா­தீர மற்றும் தெனி­யா­யவைச் சேர்ந்த  பில­துவ ஹேவகே யொஹான் தனுஷ்க ஆகியோர் சார்­பி­லேயே இந்த மனு தாக்கல்ச் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 குறித்த மனுவில், கண்டி நகர சபை,  கொழும்பு மாந­கர சபை, மாத்­தறை மாந­கர சபை,  பண்­டுவஸ் நுவ பிர­தேச சபை,  எம்­பி­லி­பிட்­டிய பிர­தேச சபை மற்றும்  ஹாலி எல பிர­தேச சபை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு உட்­பட்ட வாக்­கா­ளர்­களே தாங்கள்  என சுட்­டிக்­க­ட­டப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் கடந்த 2017 பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் வர்த்­த­மானி அறி­வித்தல் எல்லை நிர்­ணயம் மற்றும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­துடன்  இதன் போது அமைச்சர் தனது அதி­கா­ரத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது  தொகு­தி­வாரி உறுப்­பி­னர்­களின் எண்­னிக்­கையை அமைச்சர் விகி­தா­சார உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை என மாற்­றி­யுள்­ள­தாக மனு­தா­ரர்கள் மனுவில் குறிப்­பிட்­டுள்­ளனர்.  

 விகி­தா­சார உறுப்­பி­னர்­களின் எண்­னிக்­கையை தொகு­தி­வாரி  உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யா­கவும் தொகு­தி­வாரி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை விகி­தா­சார உறுப்பினர்களின் எண்ணிக்கையாகவும் அமைச்சர் பைசர் மாற்றியுள்ளதாகவும் அது சட்டத்துக்கு புறம்பானது எனவும் மனுதாரர்கள் தமது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  

 . அதனால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு நிறைவுறும் வரை அந்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் சார்பில் மேன் முறையீட்டு மன்றில் முன்வைக்கப்ப்ட்டுள்ள ரீட் மனுவூடாக கோராப்பட்ட நிலையிலேயே கடந்த 22 ஆம் திகதி வர்த்தமானிக்கு  இடைக்கால தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08