சிறுமி மீது கோர தாண்டவம் ஆடிய மூவருக்கு மரண தண்டனை

Published By: Devika

29 Nov, 2017 | 05:57 PM
image

சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தி விகாரமான முறையில் கொலை செய்த குற்றத்தில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

‘கோப்பார்டி கொலை’ என்று குறிப்பிடப்படும் இக்கொலைச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்றது.

தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த இளைஞர் ஒருவர், அவரை யாருமற்ற இடத்துக்கு இழுத்துச் சென்று சித்திரவதை செய்ததுடன் வல்லுறவுக்கும் உட்படுத்தினார். பிறகு, அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் இருவரும் சிறுமி மீது வல்லுறவில் ஈடுபட்ட பின் சிறுமியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

உயிரற்ற நிலையில் கிடைத்த சிறுமியின் உடல் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்தது. உடல் எங்கும் பற்கடி அடையாளங்கள் காணப்பட்டன. விலா எலும்பும் கை மூட்டுக்களும் நொறுக்கப்பட்டிருந்தன. பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. மூச்சுத் திணறியே அச்சிறுமி உயிரிழந்ததாக பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

கொலைச் சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களையடுத்து ஜித்தேந்திரா (26), சந்தோஷ் (30), நித்தின் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு வருடமாக நடைபெற்ற விசாரணைகளையடுத்து இன்று குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

“என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. அவள் திரும்ப வரப்போவதில்லை. ஆனாலும் இதுவே என் மகளுக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று அழுகையினூடே தெரிவித்தார் அச்சிறுமியின் தாயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47