அட்டுழுகமயில் படகு கவிழந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

அட்டுழுகமையைச் சேர்ந்த 6 இளைஞர்கள் படகொன்றில் பயணித்து கொண்டிருக்கும்போது தெல்கட எனும் பகுதியில் வைத்து குறித்த படகு திடீரென கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிளந்துள்ளனர். 

இந்நிலையில், ஏனைய நான்கு போரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 17 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.