( ஆர்.பிரபுராவ்)

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் கடந்த இரண்டு நாட்காளக வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்பிடி தொழில்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்தாழ்வு நிலையால் இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் ஆகிய கடலோரப்பகுதிகளில் கடந்த சில நாட்காளக பலத்த மழை பெய்தது மேலும் பாக்ஜலசந்தி கடலில் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோரப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்காளாக மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

இதனால் சுமார் 30 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

நேற்று நள்ளிரவு இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்கரைப்பகுதியில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திற்க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடல் சீற்றத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியதில் படகுகள் பலத்த சேதமடைந்து கரையில் ஒதுங்கியது.  

இது தோடர்பில் சேதமடைந்த படகின் உரிமையாளர் எடிசன் தெரிவிக்கையில், 

கடந்த சில நாட்களாக வீசய காற்றால் எமது பகுதியில் எவரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

நேற்று நள்ளிரவு திடீரென வீசிய சூறாவளிக்காற்றால் கடலில் நிறுத்தியிருந்த படகு கரை ஒதுங்கி பலத்த சேதமடைந்துள்ளது.

படகிலிருந்த வலைகள் அனைத்தும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. ரூபா இரண்டு இலட்சம் இருந்தால் தான் மீண்டும் மீன் பிடிக்கச் செல்லமுடியும்.

எமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு  மத்திய மாநில அரசுகள் போர் கால அடிப்படையில் இராமேஸ்வரம் துறைமுகத்தில் தூண்டி வளைவு அமைத்துத் தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.