இந்­தோ­னேஷிய பாலித் தீவி­லுள்ள அகுங் எரி­மலை குமுறி தொடர்ந்து சாம்­ப­லை­யையும் புகை­யையும் வெளித் தள்ளி வரு­கின்ற நிலையில்,  அந்த சாம்பல் அந்த எரி­மலைச் சூழ்ந்­துள்ள ஆறு­களில்  விழுந்­ததால் அந்த ஆறு­களின் நீர் சாம்பல் வர்­ணத்தில் மாறி  பாய்ந்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அந்த எரி­ம­லை­யா­னது  வளி­மண்­ட­லத்தில் 3  கிலோ­மீற்றர் உய­ரத்­துக்கு புகையை வெளித் தள்ளி வரு­வதால் பல பிராந்­தி­யங்கள் இரு­ள­டைந்து காணப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில் பாலித் தீவுக்குச் செல்லும் மற்றும் அங்­கி­ருந்து புறப்­படும் 400 க்கு மேற்­பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளதால்  சுமார் 60,000  பய­ணி­களின் பயணம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.