இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மீரா மக்கம் பள்ளியில் இடம்பெற்ற வைபவத்தில் இன சமய ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் ஜய மங்கள காத்தா  எனப்படும் பௌத்த பக்தி கீதம் இசைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற பிரதான சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை  பாடி நாட்டு மக்களது இன மொழி  ஒற்றுமையை வெளிக்காட்டியது போன்று மீரா மக்கம் பள்ளிவாசலிலும் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில்  ஜய மங்கள காதா  எனப்படும்  பௌத்த மக்களால் நற்காரியங்களில் பாடப்படும் சமயத்துடன் தொடர்புடைய கீதமான ஜயமங்கள கீதம்  இசைக்கப்பட்டது.

 இக் கீதத்தை கண்டி நகரிலுள்ள சிங்கள மகளிர் கல்லூரியின் மாணவிகள் இசைத்தனர்.