இந்­திய கிரிக்கெட் அணித் தலை வர் விராட் கோஹ்லி தன்­னு­டைய சம்­ப­ளத்தை உயர்த்தி அளிக்­கும்­படி இந்­தியக் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபை­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். 

மேலும் அவர் தனக்கு மட்டும் இல்­லாமல் இந்­திய அணியில் இருக்கும் மற்ற வீரர்­க­ளுக்கும் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கும்­படி கூறி­யுள்ளார். இந்த சம்­பளம் குறித்து விவா­திப்­ப­தற்­கான கூட்டம் விரைவில் நடக்­க­வி­ருக்­கி­றது.

இந்­திய கிரிக்கெட் அணியில் விளை­யாடும் கோஹ்லி, டோனி, அணியின் பயிற்­சி­யாளர் ரவி சாஸ்­திரி ஆகி­யோரின் சம்­பள விவ­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டன. கோஹ்லி 1 மில்­லியன் டொலர் வாங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. ஒரு வரு­டத்­திற்கு ரவி சாஸ்­திரி 1.17 மில்­லியன் டொலர் சம்­பளம் வாங்­கு­கிறார். டோனி 1.1 மில்­லி­ய­னுக்கும் குறை­வா­கவே வாங்கி வரு­கிறார்.

அதேபோல் மற்ற நாட்டு கிரிக்கெட் வீர­ர்­களின் சம்­பளம் எவ்­வ­ளவு என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் ஆஸி. வீரர் ஸ்மித் 1.47 மில்­லியன் டொலர் சம்­பளம் வாங்­கு­கிறார். இதுதான் இப்­போ­தைக்கு தனி நப­ருக்கு அளிக்­கப்­படும் அதி­க­பட்ச சம்­பளமாகும். அவ­ருக்கு அடுத்­த­ப­டி­யாக இங்­கி­லாந்து வீரர் ஜோ ரூட் 1.27 மில்­லியன் டொலர் வாங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த நிலையில் தற்­போது கோஹ்லி இது­கு­றித்து பி.சி.­சி.ஐ. கூட்­டத்தில் பேசவுள்ளார். மேலும் இவருக்கு ஆதரவாக டோனி, ரவி சாஸ்திரி ஆகியோரும் பேசவுள்ளனர். இதற்கான கடிதத்தை கோஹ்லி ஏற்கனவே அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.