செல்பி மோகத்தால் புகை­யி­ரத பாதை யில் செல்பி படம் எடுத்­து­க்கொண்­டி­ருந்த வேளையில் ரயி­லுடன் மோதி இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் முதல் ஒக்­டோபர் மாத  காலப்­ப­கு­தி வரை 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வீதி  பாது­காப்புக்­கான தேசிய பேர­வையின் ஒருங்­கி­ணைப்­பாளர் புத்­திக பிரதாப் தெரி­வித்தார்.

வீதி பாது­காப்பு தேசிய பேரவை   இல் ­லாத கார­ணத்தால் கடந்த வருடம் இதை­யொத்த சம்­ப­வங்கள் குறித்த   தர­வு­களை ஒப்­பிட்டு பார்க்க முடி­ய­வில்லை எனவும்  புத்­திக பிரதாப் மேலும் தெரி­வித்தார். இளைஞர் யுவ­தி­க­ளிடம் செல்பி மோகம் அதி­க­ரித்து காணப்­ப­டு­வது கவலைக்குரியது என இவர் மேலும் தெரிவித்தார்.