புலி­களை நியா­யப்­ப­டுத்தி வடக்கில் பிரி­வி­னை­வா­தத்தை பலப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உருவாக்க முடி­யுமா?

தமிழர்கள் வேதனை கொள்வார்கள் என்­ப­தற்­காக இரா­ணுவ வெற்றி தினத்தை நிரா­க­ரித்த அர­சாங்கம் ஏன் புலி­களின் மாவீரர் தினத்தை அனு­ம­திக்­கின்றது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி கேள்வி எழுப்­பினார். நாம் தேசியம் பேச­வேண்டும் என கூறும் நபர்கள் வடக்கில் புலிக்­க­கொ­டியை பறக்­க­விட்டு வடக்கை புலிகள் தேசம் என்­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

புதிய அர­சியல் அமைப்பு நாட்டின் பிளவின் அடித்­தளம் என்ற தொனிப்­பொ­ருளில் தேசிய சுதந்­திர முன்­னணி நாடு பூரா­கவும் முன்­னெ­டுத்­து­வரும் பிரச்­சார கூட்­டங்­களில் ஒன்று நேற்று கொழும்பில் இடம்­பெற்­றது.  இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் 

நாடு இன்று பய­ணிக்கும் திசை­யா­னது  நாம் மகிழ்ச்­சி­ய­டையும் நிலையில் இல்லை. மிகவும் மோச­மா­னதும், பயங்­க­ர­மா­ன­து­மான  விளை­வு­களை ஏற்­ப­டுத்தும்  வகை­யிலும் அமைந்­துள்­ளது.  இங்கு நாம் தேசியம் பற்றி பேசிக்­கொண்டு நல்­லி­ணக்கம் ஒன்றை உரு­வாக்க வேண்டும் என கூறிக்­கொண்­டுள்ளோம். எனினும் இந்த நிலையில் வடக்கில் பிர­பா­க­ரனை கொண்­டாடும் நிகழ்­வு­களும், புலி­களை நினை­வு­ப­டுத்தும் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. புலிக்­கொ­டியை பறக்­க­விட்டு வடக்கு புலி­களின் தேசம் என்­ப­தையே தெரி­வித்து வரு­கின்­றனர்.

 வடக்கில் பல்­வேறு இடங்­களில் சில தமி­ழர்கள் புலி­களை நியா­யப்­ப­டுத்தி போராட்டம் செய்து வரு­கின்­றனர். வவு­னி­யாவில் மூவின மக்கள் கற்கும் பாட­சா­லை­களில்  ஒரு­சில தமிழ் மாண­வர்கள் கேக் வெட்டி கொண்­டாடி சிங்­கள முஸ்லிம் மாண­வர்கள் மனதில் விரோ­தத்தை வளர்க்கும் நட­வ­டி­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். போர் வெற்றி தினத்தை கொண்­டா­டு­வதன் மூல­மாக தமிழ்  மக்கள் மனங்கள் கஷ்­டப்­படும் என கூறி மே 18 ஆம் திகதி இரா­ணுவ வெற்றி தினத்தை தடுத்த இந்த நல்­லாட்சி அர­சாங்கம் வடக்கில் புலி­களின் மாவீரர் தினத்தை கொண்­டாட பூரண அனு­ம­தி­யினை வழங்­கி­யுள்­ளது. இரா­ணுவ வெற்றி தினத்தை கொண்­டாட வேண்டாம் என்றால் அதே நிலைப்­பாட்டில் இருந்து புலி­களை அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தையும் தடுக்க வேண்டும். 

ஒரு இனத்­த­வரை  மாத்­திரம் போஷிப்­பதா நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும், ஜன­நா­ய­கத்­தையும் உரு­வாக்கும் பாதை. ? புலி­களை மாத்­திரம் பலப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டின் பெரும்­பான்மை மக்­களை மேலும் கோபப்­ப­டுத்­து­வதா நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் செயற்­பாடு? . இந்த அர­சாங்கம் நாட்டில் அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வளர்ச்­சினை உரு­வாக்­கு­வதில் வெற்­றி­பெ­ற­வில்லை. ஆனால் நாட்டில் புலி­களை மீண்டும் உயிர்­பெற வைக்கும் செயற்­பா­டு­க­லை­யெனும் தடுத்து நிறுத்த வேண்டும். எனினும் இன்று நாட்டில் இடம்­பெற்­று­வரும் செயற்­பா­டுகள், வடக்கில் இடம்­பெற்­று­வரும் சம்­ப­வங்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஒன்றை தோற்­று­விக்கும் பாதை­யினை உரு­வாக்கி செல்­கின்­றதா என்ற சந்­தேகம் எழத்­தோன்றும் வகையில் அமைந்­துள்­ளது. 

ஒரு­புறம் நாட்­டினை பிரிக்கும் சமஷ்டி அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவைக்கு அமை­யவும் புலம்­பெயர் புலி அமைப்­பு­களை திருப்­திப்­ப­டுத்­தவும் அர­சாங்கம் புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. மறு­புறம் இந்த நாட்­டிலே இன்றும் புலி­களின் கொள்­கையை ஆத­ரிக்கும் நபர்­களின் மூல­மாக மீண்டும் வடக்கில் புலி­களை உரு­வாக்கும் முயற்­சிகள் படிப்­ப­டி­யாக இடம்­பெற்று வரு­கின்­றது. ஆகவே நாட்டை நேசிக்கும், ஐக்­கி­யத்தை விரும்பும் மக்கள் இன்று தமது தவறுகளை உணர்ந்து செயற்படும் நேரம் வந்துள்ளது. ஆட்சி மாற்றத்தை ஆதரித்த 62 இலட்சம் மக்களின் நோக்கமும் நாட்டினை பிரிப்பதா அல்லது ஐக்கியத்தை விரும்புவதா என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த நாட்டினை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் எம்முடன் கைகோர்க்க வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.