நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதை யாவரும் அறிவீர்கள்.  இதேபோன்று  பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட முப்படைகள், அரச நிறுவனங்கள், அரசியல் தலைமைகள், பொதுமக்கள் ஆகியோரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொறுமையாகவும் நிதானமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் யோசனைகளுக்கு முகங்கொடுப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது காலி முகத்திடலில்  நடைபெற்று கொண்டிருக்கும் 68ஆவது சுதந்திர உரையில் தெரிவித்தார்.


இன்று நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திர தினத்தை அபிமானத்துடனும் பெருமையுடனும் கொண்டாடுகிறோம்.1948 ஆம் ஆண்டும் 2016ஆம் ஆண்டின் இன்றைய நாளும் என அனைத்தையும் எடுத்துக்கொண்டால் அரசியல், பொருளாதார, சமூகம், கலாசாரம் ஆகியவற்றில் பல மாற்றங்களை கண்டிருக்கிறோம்.1950 களில் பிறந்த குழந்தைகள் கலாசார குழந்தைகளாக காண்கிறேன்.

இன்று பிறக்கின்ற குழந்தைகள் தொழில்நுட்ப குழந்தைகளாக பார்க்கிறேன்.இன்றைய தொழில்நுட்ப கால மக்கள் புரட்சிகர எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள். அதனை புரிந்துகொண்டு நாம் செயற்பட வேண்டும்.

வெள்ளையர்கள்  எமக்கு சுதந்திரமளித்தாலும் அவர்களால் எமது நாட்டில் உண்டாக்கிய பிரச்சினைகளை மீதவைத்தே சுதந்திரத்தை அளித்தனர். ஆனால்  அதன் பின் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் நாட்டின் பௌதீக மற்றும் வர்த்தக வளர்ச்சியில் முக்கியத்துவ செலுத்தியதால் தான் 26 வருடக்கால யுத்தத்திற்கு நாங்கள் எதிர்நோக்க வேண்டிவந்தது.

யுத்தத்துக்குப் பின்னரான கால கட்டத்தை 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையாக வழிநடத்தாத காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தினால் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாத காரணத்தினால் தான் என்னிடமும் எனது அரசாங்கத்திடமும் மக்கள் ஆட்சியினை ஒப்படைத்தார்கள்.

ஆட்சியின் மீது ஆசைக்கொண்ட அரசியல்வாதிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். 

நாங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படாமல் நல்லிணக்கத்துடன் செயற்படுவோம்.இன்று எங்களுடைய நாட்டில் மாத்திரமல்ல முழு உலக நாடுகளின் தலைவர்களையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பல காணப்படுகின்றன.

தொழில்நுட்பத்தில் ஆட்சியாளர்களை விட பொதுமக்கள் முன்னேற்றகரமான நிலையில் இருக்கிறார்கள்.

இன்று நாங்கள் அரசர்கள் நாட்டை ஆளும் காலத்திலல்ல வாழ்கிறோம்.கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக காணப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட முப்படைகள், அரச நிறுவனங்கள், அரசியல் தலைமைகள், பொதுமக்கள் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொறுமையாகவும் நிதானமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் யோசனைகளுக்கு முகங்கொடுப்போம்.எமக்கு பின் சுதந்திரமடைந்த நாடுகள் எம் நாட்டை விட வளர்ச்சியடைந்துள்ளன.

இதற்கு காரணம் அவர்களின் இன, மத, மொழிகளுக்கு இடையிலான சகோதரத்துவத்துடனும்  சமத்துவத்துடனும் செயல்பட்டதே அவர்களின் வளர்ச்சிக்கு காரணம்.

ஒரு நாட்டில் கடல் வளம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஏனைய நாடுகள் கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தி பலனடைகின்றனர். ஆனால் நாம் மாத்திரம் நூற்றுக்கு ஒரு வீதம் மாத்திரம் கடல் வளத்தை பயன்படுத்துகின்றோம். எதிர்காலத்தில் கடல் வளத்தில் இருந்து முழு பலனையும் பெற திட்டமிட்டுள்ளோம்.

இலஞ்சம் ஊழல் அற்ற நாட்டை உருவாக்குவதே எமது ஆட்சியின் முக்கிய நடவடிக்கையாகும். அதை முன்னெடுப்பதில் வெற்றியும் கண்டுவருவதை நீங்கள் எல்லோரும் அறிந்ததே என்றார்.