வவுனியா, வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்றிரவு 8.50 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குச்சென்று விட்டு திரும்பிய சமயத்தில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தெரிவித்தார்.

உடனடியாக அயலவரின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் நெளுக்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க மோட்டார் சைக்கிள் தீப்பற்றியமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.