இனக் கலவ­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கா­விட்டால் நீல பசுமை பொரு­ளா­தாரம் கானல் நீரா­கி­விடும்

Published By: Robert

28 Nov, 2017 | 10:26 AM
image

இனக் கல­வ­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்கா விட்டால் சிங்­கப்பூர் இந்­த­ளவு வளர்ச்­சியை அடைந்­தி­ருக்­காது. எனவே இலங்கை தலை­வர்கள் சிங்­கப்­பூரின் வர­லாற்று பாடங்­களை கற்­றுக்­கொள்ள வேண்டும் என முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பெ.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். 

சிறு­பான்மை இனத்­திற்கு எதி­ரான வன்­மு­றைகள் அடி­யோடு நிறுத்­தப்­பட வேண்டும். வெறு­மனே விசா­ர­ணைகள் என்ற போர்­வையில் காலம் கடத்­து­வதும் ஆறுதல் வார்த்­தை­களை கூறு­வதால் மாத்­திரம் மக்­களின் காயங்கள் ஆறி­வி­டாது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

கிந்­தோட்டை உட்­பட சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு எதி­ராக காலா­கா­லமாக கட்­ட­விழ்த்­து விடப்­படும் வன்­மு­றைகள் குறித்து தெளிவு­ப­டுத்தும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

இனக்­க­ல­வ­ரங்கள் மிகவும் வேத­னைக்­கு­ரியவை. நல்­லாட்­சியில் இனக் ­க­லவ­ரங்கள் நடக்­காது என்ற நம்­பிக்­கை­யுடன் இருக்­கையில் கிந்தோட்­டையில் இடம்­பெற்­றுள்ள சம்­ப­வ­மா­னது மிகவும் வேத­னை­ய­ளிப்­ப­துடன் சிறு­பான்மை மக்களின் எதிர்­காலம் குறித்து சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் காணப்­ப­டு­கின் ­றது. 

இலங்­கையை பொறுத்தவரையில் இனக் கல­வ­ரங்கள் என்­பது சர்­வ­சா­தா­ரண விட­ய­மாகி விட்­டுள்­ளது. 1956 ஆம் ஆண்டு தனிச்­சிங்­கள சட்டம் கொண்டு வரப்­பட்ட போது கல­வரம் தொடங்­கி­யது. தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தமிழ் மக்கள் மிகவும் மோச­மாக தாக்­கப்­பட்­டனர். ஸ்ரீ ஒழிப்பு போராட்­டத்தின் போதும் கூட தமி­ழர்கள் படு­மோ­ச­மான முறையில் தாக்­கப்­பட்­டனர். 

இதன்போது தலை­ந­க­ரிலும் ஏனைய சில புற­நகர் பகு­தி­க­ளிலும் தமிழ் எழுத்­துக்­களை தார் பூசி அழித்­தனர். 1958 ஆம் ஆண்டு பாரிய இனக் கல­வரம் ஏற்­பட்டு தென்­னி­லங்­கையில் வாழ்ந்த தமிழ் மக்கள் அச்­சத்­துடன் கப்­பலில் வடக்­கிற்கு சென்­றனர். இந்த காலப்­ப­கு­தி­களில் ஏற்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத வகையில் கட்­ட­விழ்க்­கப்­பட்ட நிலையே காணப்­பட்­டது. 

ஆனால் பிற்­கா­லத்தில் அதா­வது 1960 களில் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க காலத்தில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இனக் ­க­ல­வ­ரங்கள் ஆங்­காங்கு ஏற்­பட்ட  போதிலும் பர­வாமல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. பாரிய அழி­வு­களில் இருந்து தமிழ் மக்கள் பாது­காக்­கப்­பட்­டனர். மேலும் 1970 களில் தேர்­த­லுக்கு பின்­னரும் கல­வ­ரங்கள் ஏற்­பட்­டன. 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஆட்சிக் காலத்தில் பாரிய கலவரம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்­டது. இரத்­தி­ன­பு­ரியில் தமிழ் மக்கள் மீது மிகவும் மோச­மான இன­வெறி தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து கலவ­ரங்­க­ளையும் மிஞ்சும் அள­விற்கு 1983 ஆம் ஆண்டில் கல­வரம் ஏற்­பட்­டது. கறுப்பு ஜுலை கலவ­ரத்தின் இழப்­பு­களை தமி­ழர்கள் இன்றும் அனு­ப­விக்­கின்­றனர். இவ்­வாறு தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இனவெறி கல­வ­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை இலங்கையில் வழ­மை­யான ஒன்­றாகி விட்­டுள்­ளது. அதே போன்று தற்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் வன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் தர்கா நகரில் பாரி­ய­தொரு கல­வரம் ஏற்­பட்­டது. 

ஒரு சிறிய விவ­காரம் பாரிய பூதா­கர இன­மோ­த­லாக வெடித்­த­மை­யினால் மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்சி அதி­கா­ரத்தை இழக்கும் நிலை ஏற்­பட்­டது. சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக திட்­டமிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­மு­றை­களை கண்டும் காணா­ததை போன்று மஹிந்த ராஜ­பக் ஷ இருந்­த­மையின் வெளிப்­பா­டுகள் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் அறிய கூடி­ய­தாக இருந்­தது. சிறு­பான்­மை­யின மக்கள் மஹிந்த ஆட்­சியில் நம்­பிக்கை இழந்து போனார்கள். கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற சம்­ப­வமும் சிறிய விபத்­தொன்றைமையப்­ப­டுத்­தி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பக்­கச்­சார்­பின்றி செயற்­பட்டால் இவ்­வா­றான இன மோதல்கள் இடம்­பெ­றா­த­வாறு தடுத்து விடலாம். ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இரண்டு இனங்­க­ளுக்கு இடையில் மோதல்கள் இடம்­பெறும் போது பாது­காப்பு தரப்­புகள் பரா­மு­க­மா­யி­ருப்­பது மோதல்கள் வலு­வ­டைய கார­ண­மா­கின்­றது. பிரச்­சி­னைக்கு கார­ண­மா­னவர் எந்­த­வொரு இனத்­த­வ­ராக இருந்­தாலும் சட்­டத்­தினை நடை­மு­றை ப்­ப­டுத்­தி­யி­ருந்தால் கிந்­தோடையில் கலவரம் ஏற்­பட்­டி­ருக்­காது. 

வெறு­மனே விசா­ர­ணைகள் என்ற போர்­வையில் காலம் கடத்­து­வதும் ஆறுதல் வார்த்­தை­களை கூறு­வதால் மாத்­திரம் மக்­களின் காயங்கள் ஆறி­வி­டாது. நல்லாட்சி அர­சாங்­கத்தின் நீல பசுமை பொரு­ளா­தா­ரத்தை மையப்­ப­டுத்­திய  வரவு–செலவுத் திட்­டத்தை சமர்­ப் பித்த போது அமைச்சர் மங்­கள சம­ர­வீர நாட்டின் சரித்­தி­ரத்­தையும் நினைவு கூர்ந்தார். பின்னர் சிங்­கப்­பூ­ருடன் ஒப்­பிட்டு கருத்­து­ரைத்தார். 2025 ஆம் ஆண்டு பொரு­ளா­தார வெற்றி இலக்­குகள் குறித்து பிர­தமர் ரணில் விக்ர­ம­சிங்க பேசும் போதும் சிங்­கப்­பூ­ரையே உதா­ரணம் காட்­டினார். 

சிங்­கப்­பூ­ருக்கு தலைமை தாங்­கிய லீ குவான் யுவி­ட­மி­ருந்து எமது நாட்டு தலை­வர்கள் பாடங்­களை கற்­றுக்­கொள்ள வேண்டும். சிங்­கப்­பூரில் ஆட்சி அதி­கா­ரத்­திற்கு சென்­ற­வுடன் லீ குவான் யு கலவ­ரங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்தார். இன­, மத, மொழி பேதங்­க­ளற்ற சிங்­கப்­பூரை உரு­வாக்­கினார். அந்­நாட்டு மக்­க­ளுக்கு தேசப்­பற்றை ஊக்­கு­வித்தார். இனம், மதம் மற்றும் மொழி ரீதி­யாக வேறு­பட்டா லும் அனை­வரும் சிங்­கப்பூர்வாசிகள் என்ற உணர்வை ஏற்­ப­டுத்­தினார். 

ஆனால் சிங்­கப்­பூரை உதா­ரணம் காட்டும் இலங்­கையில் இன மோதல்கள் மற்றும் இன­வாதத்­திற்கு  முடி­வுக்­கட்ட முடி­யாத துரதிர்ஷ்ட­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆட்சி அதி­கா­ரத்­திற்கு வரும் தலை­வர்கள் மக்கள் மத்­தியில் வேறு­பா­டு­களை ஏற்­ப­டுத்தாத சூழலை உறுதிப்­ப­டுத்தி அனைத்து இன மக்­களின் சமா­தா­னத்­திற்­காகவும் செயற்­பட வேண்டும். அப்போது தான் வெற்றி இலக்­கு­களை அடைய முடி யும். இல்லை என்றால் கன­வு­லகில் வாழ வேண்­டிய நிலையே அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் ஏற்­படும். 

மேலும் இனக் கல­வ­ரங்­களை அர­சியல் சுய­ந­லத்­திற்­காக பயன்­ப­டுத்தும் கொள்­கையில் இருந்து எதிர்க் கட்­சிகள்  விலக வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இந்த விட­யத்தில் சிந்­திக்க வேண்டும். சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை நாட்டில் ஏற்­ப­டாமல் தடுக்க வேண்­டிய கடமை மஹிந்த ராஜப­க் ஷ­விற்கு உண்டு. ஒரு­ சா­ராரை நேசிப்­ப­வர்­க­ளாக இருக்கக் கூடாது. நாட்­டையும் அனைத்து இன மக்­க­ளையும் நேசிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். 

சிங்­க­ள­வர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்­லிம்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் அபிவிருத்திகளுக்கு இந்த அனைத்து இன மக்களும் பங்களிப்பு செய்துள்ளனர். எதிர்காலத்திலும் இந்த பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும். நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபி விருத்திகளை நோக்கி செல்லும் இலங்கைக்கு அனை த்து இன மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது முக்கியமானதாகும்.

சில பிரச்சினைகளை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பான இன மோதல்களை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சட்டங் களை வெறுமனே ஏடுகளில் வைத்திருப்பதில் பலன் இல்லை. இன ஒற்றுமைக்கு எதிராக செயற்படுப வர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32